ஜெசாக் நிறுவனத்தினால் SDGAP திட்டம் மூலம் நடாத்தப்படுகின்ற பெண்களினை அரசியலில் வலுவூட்டுகின்ற செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக மாகாண மட்ட கலந்துரையாடல் நிகழ்வானது நேற்று(22) கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றிருந்தது.
அந்நிகழ்வில் வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ரீதியாக அரசியல் ஆர்வமுள்ள பெண் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அதில் நிறுவன செயற்றிட்டத்தின் விபரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பெண்களுக்கான 25% அரசியல் இட ஒதுக்கீடு பற்றிய பங்குபற்றுனர்களின் கருத்து மற்றும் அரசியலில் ஈடுபடவிரும்பும் பெண்களுக்கு இருக்க வேண்டிய திறன்கள் மற்றும் அவர்கள் முகம் கொடுக்கும் சவால்கள் என்பவை பற்றி கலந்துரையாடப்பட்டது.
பாறுக் ஷிஹான்