எதிரிகளின் விமானத்தை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட பராக் 8 ரக ஏவுகணைகளை இஸ்ரேலிடம் இருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவும் இஸ்ரேலும் ராணுவம், விவசாயம் உள்ளிட்டதுறைகளில் ஒத்துழைக்க ஏற்கெனவே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இந்திய கடற்படைக்காக இஸ்ரேலிடமிருந்து சக்திவாய்ந்த பராக் 8 ரக ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்காக இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இந்தியாவின் பாரத் எலக்டN;ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் 77.7 கோடி டொலருக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்க உள்ள இந்த ஏவுகணை தரையில் இருந்து விண்ணுக்குச் சென்று எதிரிகளின் விமானங்கள், ஹெலிகொப்டர்கள், ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.