ஆபாச தளங்களை முடக்குமாறு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து 827 ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இணைய தளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் ஏராளமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகின்ற நிலையில் இந்தியாவில் இவற்றுக்கு தடைகள் எதுவும் இல்லை என்கின்ற நிலையில்; ஆபாச தளங்களை முடக்குமாறு கோரி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது.கடந்த மாதம் 27ம் திகதி குறித்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய தளங்களை முடக்குமாறு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து மத்திய இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் நீதிமன்றம் குறிப்பிட்ட 857 ஆபாச தளங்களை ஆய்வு செய்ததில 827 தளங்களில் ஆபாச படங்கள் காணப்பட்தனையடுத்து அவற்றுக் தடைவிதிக்கப்பட்டுள்ளது.