Home இலங்கைநகரின் மத்தியில் உள்ள பள்ளத்தை மூடுமாறு மக்கள் கோரிக்கை

நகரின் மத்தியில் உள்ள பள்ளத்தை மூடுமாறு மக்கள் கோரிக்கை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி நகரின் கரைச்சி பிரதேச சபைக்கு முன்னாள் உள்ள பள்ளத்தை மூடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பள்ளத்தில் தேங்கி நிற்கின்ற மழை நீர் மாதக்கணக்கில் தேங்கி நிற்பதோடு, கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுகின்றது எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதி அதிகளவு பொது மக்கள், மாணவர்கள் பயன்படுத்துகின்ற வீதியாகவும், மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை, உணவகங்கள் என்பன காணப்படும் வீதியாகவும் உள்ளது. எனவே குறித்த பள்ளத்தினால் அங்கு தேங்கி நிற்கின்ற நீர் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்களும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன. எனவும் பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More