185
உசுப்பேத்திறவன்கிட்ட உம்னு கடுப்பேதிறவன்கிட்ட கம்னு இருந்தா வாழ்கை ஜம்னு இருக்கு… இவ்வாறு ஒரு வசனம் சர்கார் திரைப்படத்தில் இடம்பெறுகிறது. சர்கார் விஜய் இப்போது எப்படி இருப்பார்? என்ன செய்வார் என்று அவரை நோக்கி சமூக வலைத்தளங்களில் கேள்வி ஒன்று முன்வைக்கப்படுகிறது. சர்கார் கதை திருடப்பட்டுள்ளதா? என்பதே இப்படி ஒரு சிக்கல் எழுந்திருக்க காரணம்.
சர்கார் கதை திருட்டப்பட்டுள்ளதாக வருண் என்பவர் தமிழ் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செய்த முறைப்பாட்டை விசாரித்த தலைவர் கே பாகியராஜ் மற்றும் மற்ற உறுப்பினர்கள் சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்றுதான் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இன்று வெளியாகியுள்ள அந்த அறிக்கையில் ‘தெளிவாக விவாதித்து ஒரு சிலரின் கருத்து வேறுபட்டிருந்தாலும் மெஜாரிட்டியான மெம்பர்களின் ஒப்புதலோடு ’செங்கோல்’ என்ற கதையும் ’சர்கார்’ படக்கதையும் ஒன்றே என முடிவு செய்தோம். உங்கள் பக்க நியாத்திற்காக நீங்கள் (வருண்) அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை நாங்கள் தடை செய்ய மாட்டோம். முழுமையாக தங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறோம்,’ எனத் தெரிவித்துள்ளனர்.
இன்னும் ஒரு வாரத்தில் அவர் இயக்கி தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்கார் படம், வருண் என்கிற ராஜேந்திரன் தான் 2007இல் எழுதி பதிவு செய்த செங்கோல் படத்தின் கதை என முறைப்பாடு தெரிவித்தார். இதையடுத்து இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு திரை எழுத்தாளர்கள் சங்கம் இரண்டு கதைகளையும் படித்துப் பார்த்து இராண்டும் ஒரே கதையே என அறிவித்துள்ளது. இதில் சர்கார் படத்தில் விஜய், சன் பிக்சர்ஸ் போன்வர்கள் இருப்பதனால் தமது சங்கத்திற்கு சிக்கல் வேண்டாம் என சில உறுப்பினர்கள் அஞ்சிய போதும் சங்கத்தின் தலைவர் கே பாக்யராஜ் தைரியமாக இந்த முடிவை அறிவித்துள்ளார்.
ஏ ஆர் முருகதாஸின் மீது கதை திருட்டு முறைப்பாடு சொல்லப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவர் இயக்கிய ஏழாம் அறிவு, கத்தி போன்ற படங்களின் கதைகள் தமது கதை என சிலர் அவர்மீது குற்றம் சாட்டியுள்ளனர். கத்தி திரைப்பத்தின் கதையை இயக்குனர் கோபி நயினார் தன்னுடைய கதை என்று வழக்கு தொடுத்தார். அவரே அறம் என்ற திரைப்படத்தை பின்னாளில் இயக்கியிருந்தார்.
இதுமட்டுமல்லாமல் அவர் இயக்கிய கஜினி படமும் ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்குனர் இயக்கிய மெமண்டோ படத்தின் பிரதியே. (அவர் எப்போது புகார் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை?). ஆனாலும் அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வணிக அளவில் பெரிய வெற்றி பெருவதால் தொடர்ந்து பெரிய கதாநாயகர்களை கொண்டு படம் இயக்கிக் கொண்டு வருகிறார். கம்னு இருந்தா வாழ்கை ஜம்னு இருக்கு… என விஜய் இருப்பாரா? அல்லது இந்த அநீதியை தீர்த்து வைக்க முன் வருவாரா?
Spread the love