நேற்றையதினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்திற் கொண்டு அனைத்து காவல்துறை அதிகாரிகளினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள், பிரதி காவல்துறை மா அதிபர்கள், வலயத்துக்கு பொறுப்பானவர்கள், காவல்துறை பரிசோதகர்கள் உள்ளிட்ட அனைத்து காவல்துறை உத்தியோத்தர்களினதும் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுமுறையில் இருக்கும் அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் உடனடியாக கடமைக்கு சமூகமளிக்குமாறு காவல்துறை மா அதிபர் அறிவித்தில் விடுத்தள்ளார்.