168
போட்டிப்பரீட்சை மண்டபத்தில் சட்டவிரோதமாக சுமார் 10க்கும் அதிகமான கைத்தொலைபேசிகளை தம்வசம் வைத்திருந்த பரீட்சாத்திகளிடம் இருந்து இலங்கை பரீட்சைத் திணைக்கள திடீர் பரிசோதனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இன்று (27) கொழும்பு தெமட்டகொட பகுதியில் உள்ள சென்.மத்தியூஸ் பாடசாலையில் இலஞ்ச ஊழல் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கான திறந்த போட்டி பரீட்சை மண்டபத்திலேயே குறித்த கைத்தொலைபேசிகள் அதிகாரிகளால் மீட்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டுள்ளது. குறித்த பரீட்சை நாடளாவிய ரீதியாக இடம்பெற்று வரும் நிலையில் இப்பரீட்சை மண்டபத்தில் மாத்திரம் இவ்வாறான பெரும் தொகையான கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பரீட்சை மண்டபத்தினுள் கைத்தொலைபேசி கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ள போதிலும் அதை மீறி கொண்டு செல்வது தண்டனைக்குரியதாகும் என அங்கு கடமையாற்றிய பரீட்சை அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு பரீட்சை மண்டபத்தில் கைத்தொலைபேசிகளுடன் பிடிபடுபவர்களிற்கு 5 வருடம் எவ்வித பரீட்சைகளும் முகம் கொடுக்க முடியாது என இலங்கை பரீட்சை திணைக்களம் பகீரங்கமாகவே அறிவித்திருந்தது.
குறித்த இப்போட்டி பரீட்சையில் கைத்தொலைபேசிகளை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்தவர்கள் கண்டி வவுனியா கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
பாறுக் ஷிஹான்
Spread the love
1 comment
It’s what a shame full act. In fact there was already a allegation over that SLAS exam paper had been leaked and consequently that candidates who ever passed in these exams. Ok Ok now Mahinda mama’s regime. There no worries any one could answer those exam papers like his son who passed those Law exam in special facility in confine environment just who ever those high scollers like our Sri Lankan 1st class Law degree holder G.L.Peiris mama may helped him to gain that LLB degree ha ha ha. No worries ya folks just that like fun ya