அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க்(Pittsburgh ) நகரிலுள்ள யூத வழிபாட்டு தலமொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழிபாட்டுக்கென மக்கள் ஒன்று கூடியிருந்த நிலையில், இனந்தெரியாத ஒருவர் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து யூதர்களும் உயிரிழக்க வேண்டும் என சத்தமிட்டவாறு குறித்த நபர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுளள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட எதிர்தாக்குதலில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் காயமடைந்த நிலையில காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிதாரி 46 வயதுடைய ரொபர்ட் பௌஸர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.