Home பிரதான செய்திகள் இலங்கைக்கெதிரான இருபதுக்கு 20 போட்டி- இங்கிலாந்து 30 ஓட்டங்களால் வெற்றி

இலங்கைக்கெதிரான இருபதுக்கு 20 போட்டி- இங்கிலாந்து 30 ஓட்டங்களால் வெற்றி

by admin

கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 30 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பினை மேற்கொள்ளத் தீர்மானித்ததன் அடிப்படையில் முதல்லி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து 188 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டத்தை மாத்திரம் பெற்று, 30 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது. இந்தநிலையில் ஒரேயொரு போட்டியை னொண்ட தொடரினை இங்கிலாந்து 1-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More