157
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு கோரியே இவ்வாறு வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love