வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய 6 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபிதாபி ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது சிலரது உடமைகளில் இருந்த தங்கப் பேனா, சொக்லேட், பேப்பர், சவர்கார பவுடர் போன்றவற்றில் தங்ககட்டிகளை பதுக்கி கொண்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சென்னை மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 6 பேரிடம் இருந்து 78 லட்சம் ரூபா பெறுமதியுடைய 2.6 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர்களi கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.