139
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
முல்லைத்தீவு கேப்பாபிளவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு இன்றைய தினம் 610 நாளாக போராட்டத்தை முன்னெடுத்ததுடன் , முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி கொட்டும் மழைக்கு மத்தியிலும் நடைபயணத்தினை மேற்கொண்டு இருந்தனர். இன்றைய போராடத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலை கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேவேளை மாவட்ட செயலருக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்குமான மகஜரினை கேப்பாபிளவு மக்கள் யாழ்.பல்கலை கழக மாணவர் ஒன்றிய தலைவர் கி. கிருஷ்ணமேனன் ஊடாக வழங்கி வைத்தனர்.
Spread the love