இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய பல நாடுகள் முயற்சிக்கின்றன எனவும் வெளிநாடுகளின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மைத்திரி – மகிந்த அரசில் தான் எந்தப் பதவியையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்த அவர் தற்போதைய அமைச்சர்களுக்கு மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்கி அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டிய தேவை உள்ளது.
அதன் பின்னரே நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுத்து அரசை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர் வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு முகம் கொடுக்கும் பல்வேறு முயற்சிகளை இலங்கை எதிர்கொண்டுள்ளது எனவும் ஆனால், தாங்கள் பொதுவாக அதனைக் கவனிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமே தவிர வெளிநாட்டவர்கள் கேட்கின்றார்கள் என்பதற்காக நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது எனவும் ரணில் விரும்பினால் அலரி மாளிகையில் தங்கியிருக்கலாம் எனவும் அவர் பிரதமராக பாசாங்கு செய்கின்றார் எனவும் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்