குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டங்களை இத்தாலி அரசு உருவாக்க உள்ளது. அதன்படி 3-வது குழந்தை பெறுபவர்களுக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகின்ற நிலையில் அந்த நாடுகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் தான் குழந்தை பிறப்பு விகிதம் மிக குறைவாக இருக்கிறது. கடந்த ஆண்டு அந்த நாட்டில் 4 லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.
இந்தநிலையில் குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டங்களை அரசு உருவாக்க முன்வந்துள்ளதன்படி 3-வது குழந்தை பெற்றால் அவர்களுக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்கலாம் என முடிவெடுத்துள்ளனர்.
இத்தாலியில் 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அரசுக்கு சொந்தமாக உள்ளன. இவற்றை 3-வது குழந்தை பெற்றவர்களுக்கு வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமான அறிவிப்பு எதிர்வரும் வரசுசெலவுத்திட்டத்தில் வெளியிடப்பட உள்ளதுடன் இதனை எவ்வாறு அமுல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதமாக தெரிவிக்கப்படுகின்றது.