171
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் நால்வர் இன்று (01) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு
- Mrs. Alaina Teplitz – ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர்
- Mr. Akira Sugiyama – ஜப்பான் தூதுவர்
- Mr. Eric Lavertu – பிரான்ஸ் குடியரசின் தூதுவர்
- Mr. Ashraf Haidari – ஆப்கானிஸ்தான் தூதுவர்
வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Spread the love