137
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்ப்பட நாதன் திட்டம் கிராமத்தில் அனுமதி இன்றி தமது மாட்டை இறைச்சிக்கு வெட்டிய உரிமையாளர் உட்பட மூவர் தர்மபுரம் காவல்துறையினரால் நேற்று (31.10.2018) கைது செய்யப்பட்டுள்ளனர்
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சோதனையிட்ட பொழுது சுமார் நூறு கிலோவுக்கும் அதிகமான மாட்டிறைச்சி மற்றும் ஒன்பது கத்தி ஒரு கோடரி என்பவற்றை மீட்டுள்ளதோடு மூவரை கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயப்படுத்த இருப்பதாக தர்மபுரம் காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
Spread the love