ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றம் அடுத்தவாரம் கூடும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு உரிய ஆசனம் ஒதுக்கப்படும் என சபாநாயகர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்கள் அவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் குழுக்கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை சபாநாயகருக்கும் சில அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இடையிலும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது