145
ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் இருந்து வெளியேற்ற திட்டம் தீட்டப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்வைத்த குற்றச்சாட்டினை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ நிராகரித்துள்ளார். நேறறையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அஜித் பி பெரேரா, கொள்ளுப்பிட்டி காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றாக தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பிலேயே பாதுகாப்பு செயலாளர் மறுப்புத் தெரிவித்ததாகவும் அவ்வாறான ஒரு கலந்துரையாடல் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்ததாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.
Spread the love