தமிழகத்தில் நாள்தோறும் 80 பேர் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2,700 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் நாளொன்றுக்கு 50 பேர் டெங்கு பாதிப்பாலும், 30 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பாலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் எனத் தெரிவித்த அவர் இந்தாண்டு டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.