கிளிநொச்சியில் நீண்டகாலமாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த கரைச்சிப்பிரதேச சபையினுடைய பொதுநூலகக்காணி இன்று இராணுவத்தினரால் பிரதேச சபை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுநூலகக்காணி கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளமையினால் கரைச்சிப்பிரதேச சபையின் பொதுநூலகம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பல்வேறு இடநெருக்கடிகளுக்கு மத்தியில் மாற்றிடத்தில் இயங்கி வருகின்றது.
இதனையடுத்து குறித்த பொதுநூலகக்காணியை விடுவிக்க வேண்டுமென கரைச்சிப்பிரதேச சபையின் அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தீர்மானத்தின் பிரதிகள் படைத்தரப்பு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
ஆத்துடன் கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடலிலும் குறித்த காணி விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்தநிலையில் இன்று குறித்த நூலகக்கட்டடம் மற்றும் காணி என்பன இராணுவத்தினரால் பிரதேச தவிசாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.