149
அரசியலமைப்பின் அடிப்படையிலேயே புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.விடம் தெளிவுபடுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றிரவு இரவு ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டாரஸ் தொலை பேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய போதே இவ்வாறு தெளிவுபடுத்தியதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் அரசியலமைப்பிற்கு முரணான செயலென ஐ.தே.க. குறிப்பிட்டு வரும் நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Spread the love