Home இலங்கைபுலிகளை விட யானைகளை வீழ்த்தியதுதான் மக்களுக்கு மகிழ்ச்சியாம் :

புலிகளை விட யானைகளை வீழ்த்தியதுதான் மக்களுக்கு மகிழ்ச்சியாம் :

by admin

மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்ற பின்னர் புலிகளை வீழ்த்தியதை விட யானைகளை வீழ்த்தியமை தொடர்பில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேனசிங்க தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 26 ஆம் திகதியின் பின்னர் ரணில் விக்ரமசிங்கவை முன்னாள் பிரதமராக மாத்திரம் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக கூறிய அவர் கடந்த அரசாங்கத்தின் போது எதிர்க்கட்சிக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை போன்று தற்போதைய அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் செய்யாது என்றும் கூறினார்.

அத்துடன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையான பாதுகாப்பை வழங்க தற்போதைய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்ற பின்னர் புலிகளை வீழ்த்தியதை விட யானைகளை வீழ்த்தியமை தொடர்பிலேயே மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More