2015ம் ஆண்டு அணு ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மீதான தடைகள் நீக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் ஆற்றல், கப்பல்துறை மற்றும் வங்கித்துறைகளை இலக்காக கொண்டு, இதுவரை இல்லாத அளவிற்கு அந்நாட்டின் மீது விதிக்கப்படும் கடுமையான தடைகளாக இவை காணப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எனினும், ஈரானிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் 8 நாடுகளை அமெரிக்கா தண்டிக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஸ்யா, சீனா, பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை கடந்த 2015ஆம் ஆண்டு ஈரான் மீது எண்ணெய், வர்த்தகம் மற்றும் வங்கி உள்ளிட்ட துறைகளில் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச தடைகளை முடிவுக்கு கொண்டுவரும் அணுஉடன்பாட்டில் கையெழுத்திட்டன. எனினும்; இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக டிரம்ப் கடந்த மே மாதம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது