173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.காங்கேசன்துறை காவல் நிலையம் முன்பாக இளம் பெண்ணொருவர் தனக்கு தானே தீ மூட்ட முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். நெல்லியடியை சேர்ந்த குறித்த பெண் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக தெரிவித்தே இவ்வாறு காவல் நிலையம் முன்பாக தனக்கு தானே பெற்றோலை ஊற்றி தீ மூட்ட முற்பட்டுள்ளார்.
அதனை அவதானித்த காவல்துறையினர் விரைந்து செயற்பட்டு குறித்த பெண்ணை காப்பாற்றி அவரை சமரசப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்
Spread the love