இந்தியாவுக்கெதிரான இருபதுக்கு 20 தொடரிலிருந்து மேற்கிந்தியதீவுகள் அணியின் சகலதுறை வீரர் அன்ட்ரு ரசல் விலகியுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியதீவுகள் அணியுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து இன்று இருஅணிகளுக்குமிடையேயான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது போல் 20 ஓவர் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்தியா இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவுடனான இருபதுக்கு 20 தொடரில் இருந்து உபாதை காரணமாக ரசல் விலகுவதாக அந்த அணி அறிவித்துள்ளது.
Spread the love
Add Comment