அமெரிக்கா – சீனாவுக்கு இடையில் நடந்துவரும் வர்த்தகப் போரானது மிகவும் முட்டாள்தனமானது என அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மா தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு அளவுக்கு அதிகமான வரியை விதித்து வருகின்றதனால் இருதரப்பு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவுக்கு 500 பில்லியன் டொலருக்கும் கூடுதலான பெறுமதியான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இரு நாடுகளுக்கும் இடையில் நடந்துவரும் இந்த வர்த்தகப் போரானது மிகவும் முட்டாள்தனமானது என ; ஜேக் மா கூறியுள்ளார்.
சீனாவின் ஷாங்காயில் ஆரம்பமாகியுள் சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் நேற்றையதினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாவதை தனது பொருளாதார நடவடிக்கைகளால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடுத்துள்ளார் எனவும் இதனால் பெரிய பிரச்சினைகள் உருவாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் சீனாவின் இறக்குமதி முயற்சிகள் உள்நாட்டில் பல தொழில்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் என்ற போதிலும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் எனவும் தெரிவித்துள்ளார்.