மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவை நோக்கி சென்று கொண்டிருக்கும் குடியேறிகள் ஊர்வலத்தை சேர்ந்த ஒருவர் மெக்ஸிகோ தலைநகரத்தை சென்றடைந்துள்ளார். இவர்தான் மெக்ஸிகோ நகரத்தை சென்றடைந்த முதலாவது நபராவார். கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதி ஹோண்டியுரஸ் நாட்டிலிருந்து சுமார் 5000 பேருடன் புறப்பட்ட இந்த ஊர்வலமானது, குடியேறிகள் ஊர்வலம் என அழைக்கப்படுகிறது.
தங்கள் நாடுகளில் தங்களுக்கென எந்த பொருளாதார வாய்ப்பும் இல்லை எனவும் எவ்வாறேனும் அமெரிக்கா சென்று விட்டால் தமது வாழ்வு மாறும் என்பதுடன் தமது குழந்தைகள் வன்முறையிலிருந்து விலகியிருப்பார்கள் எனும் நம்பிக்கையுளுடன் அமெரிக்காவை நோக்கி செல்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் அவர்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ள அமெரிக்கா அகதிகளின் வருகையை தடுப்பதற்காக எல்லையில் ராணுவத்தினைக்கு குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது