குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமுல்படுத்த கோரிய மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சமூக சேவகரும், ஒரு தொண்டு நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அனுபம் பாஜ்பாய் என்பவர் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில்குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமுல்படுத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மேலும், மக்கள் தொகை அபாயகரமாக உயர்ந்து வருவதால், வனவளம் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாக்கப்படுகின்றன எனவும் சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது எனவும் இதனால் 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனத்தெரிவித்த உச்சநீதிமன்றம் வழக்கினை தள்ளுபடி செய்துள்ளதுடன் இந்த கோரிக்கையை அரச நிர்வாகத்திடம் எடுத்துச் செல்லுமாறும் மனுதாரருக்கு ஆNலூசனை வழங்கப்பட்டுள்ளது