Home இலங்கை MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…

MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…

by admin

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு திறந்த கடிதம் தேவநேசன் நேசையா-

 

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்..
குறிப்பு: 1959 ல் இருந்து நாட்டில் பணியாற்றிய ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவரும் 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் தேசிய கௌரவ விருது பெற்றவருமான கலாநிதி தேவநேசன் நேசையா என்பவரால் அனுப்பப்பட்ட கடிதத்தின் எழுத்துரு நகல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

07.11.2018
மேன்மை மிகு மைத்திரிபால சிறிசேன,
ஜனாதிபதி,
இலங்கை.
உங்கள் மேன்மைக்கு,

இலங்கையின் விசுவாசமான ஒரு குடிமகனாகவும், “தேசமான்ய” என்ற உயர் கௌரவ விருதுக்கு நான் பொருத்தமுடையவன் என உங்களால் தெரிவு செய்யப்பட்டு அந்த விருதினை உங்களிடமிருந்து 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பெற்றுக் கொண்டவனாகவும் நான் இதனை எழுதுகிறேன். எனக்குக் கிடைத்த விருதினையும் நாட்டிற்கு நான் செய்த சேவைக்கான ஜனாதிபதியின் அங்கீகாரத்தையும் கொண்டாடுவதற்காக எனது குழந்தைகள், பேரப்பிள்ளைகள், ஏனைய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என மூன்று கண்டங்களில் இருந்து வந்திருந்தார்கள்.

நான் உங்களை முன்னர் அரிதாகவே அறிந்திருந்தேன். ஆனால், நீங்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது என் குடும்பம், நண்பர்கள் மற்றும் நான் மிகவும் மகிழ்வடைந்தோம். அந்த மகிழ்வு, நம்பிக்கை, உங்கள் மேன்மை என்பன அண்மைய வாரங்களில் எமது 70 ஆண்டுகால ஜனநாயகத்திற்கு அப்பட்டமான வீழ்ச்சியை ஏற்படுத்தும் ஏமாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.

நான் ஒரு விசுவாசமான இலங்கையின் தேசபக்தனாக ஆனால் நீங்கள் எனக்கு வழங்கிய “தேசமான்ய” விருதின் பதக்கத்தையும் அதற்கான சான்றிதழையும் வருத்தத்துடன் திருப்பித்தருவதைத் தவிர வேறு மாற்று இருப்பதாக நான் பார்க்கவில்லை.

நான் தற்போது வெளிநாடுகளில் இருக்கிறேன். மற்றும் நான் இலங்கைக்கு திரும்பி வரும்போது விருதிற்கான பதக்கத்தையும் சான்றிதழையும் உங்கள் அலுவலகத்திடம் திருப்பத்தருவதற்கு ஏற்பாடுகள் செய்வேன்.

நான் இந்த முடிவைப் பரிசீலிக்காமலோ அல்லது அவசரத்திலோ எடுக்கவில்லை. இலங்கையின் சிவில் சேவையில் ஒரு “கடேற்” தரநிலையில் பணியாற்றத் தொடங்கிய காலத்திலிருந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக கொள்கைகளுக்கிணங்க மிகவும் பெருமைச் சுமையுடன் எப்பொழுதும் செயற்பட்டிருக்கிறேன். எனது நீண்டகாலச் சிவில் சேவையில் என் மதிப்பினைச் சமரசம் செய்ய மறுத்ததனால், ஐ.தே.க மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் அடிக்கடி முடக்கப்பட்டேன்.

நீங்கள் எனக்கு வழங்கிய “தேசமான்ய” விருதில் நான் இனி மேலும் பெருமைகொள்ள முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் பொக்கிசமான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பத்தருகிறேன்.

உண்மையுள்ள,
கலாநிதி தேவநேசன் நேசையா

An Open Letter to President Maithripala Sirisena
Devanesan Nesiah
DEVANESAN NESIAH
on 11/07/2018

Editors Note: The following is the text of an open letter sent in by Dr. Devanesan Nesiah, a retired civil servant who has who has served the country since 1959. In 2017, he was awarded with the National Honours by President Sirisena.

7th November 2018

His Excellency Maithripala Sirisena,
President,
Sri Lanka.

Your Excellency,

I write as a loyal citizen of Sri Lanka and a proud recipient of the great titular honour of ‘Deshamanya’ that Your Excellency saw fit to confer on me in March of 2017. My children, grandchildren, other relatives and close friends gathered from three continents in celebrating the award and the Presidential recognition of my services to our great nation.

I barely knew you earlier but my family, friends and I were greatly elated when you were elected President. That elation and hope, Your Excellency, has given way to disappointment over your very blatant flouting of our seventy-year-old democracy, in recent weeks.

As a loyal and patriotic Sri Lankan but I see no alternative to regretfully return the ‘Deshamanya’ medal and certificate that you awarded me. I am currently overseas and will make arrangements to return the medal and certificate to your office, when I come back to Sri Lanka.

Your Excellency, my decision isn’t one that I’ve taken lightly, or in haste. To always act in accordance with my principles is a burden that I’ve embraced with pride for nearly 60 years, since I first enrolled as a cadet in the Ceylon Civil Service. My long career in the civil service, was often stymied under both UNP and SLFP regimes for my refusal to compromise my values.

Since I can no longer take pride in the title of ‘Deshamanya’ that you’ve conferred on me, I have no option but to return my treasured medal and certificate.

Sincerely,

Dr. Devanesan Nesiah

Thanks – Groundviews

Spread the love
 
 
      

Related News

1 comment

Siva November 7, 2018 - 4:41 pm

திரு. தேவநேசன் நேசையா அவர்கள் ஒரு மானமுள்ள தமிழர் என்பதிலும், அவர் சார்ந்த சமூகத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள் என்பதிலும், நாம் பெருமை கொள்வோம்!

தகுதியற்ற ஒருவரினால் வழங்கப்படும் சன்மானம் மற்றும் விருதுகள் கூட எம்மை இழிவு படுத்தும்
என்பதை திரு. நேசையா அவர்கள் சரியாகக் கணித்ததோடல்லாமல், உரத்துக் கூறி அதை மீளளிக்க முன்வந்திருப்பது பெருமைக்குரியது.

மந்திரிப் பதவிகளுக்காகவும், பிரதி மந்திரிப் பதவிகளுக்காகவும் எம்மவர்கள் சிலர் தன்மானமிழந்து இனத்தைக் காட்டிக் கொடுக்க முன்வந்திருப்பது, வேதனை அளிக்கின்றது.

பொதுவாகவே, ஒழுக்கத்துக்குப் பெயர் போனவர்கள் ஒரு நாட்டின் இராணுவ சேவையில் இருப்பவர்கள் என்பது, பொது மொழி. ஆனால் எமது நாட்டிலோ ஒழுக்கம் என்றால், ‘கிலோ என்ன விலை’, என்று கேட்கும் இராணுவத்தினரை வழி நடத்திய முன்னாள் இராணுவத் தளபதி திரு. சரத் பொன்சேகா, அரசியலமைப்பைத் துச்சமென மதித்துத் தான்தோன்றித்தனமாக நடக்கும் திரு. மைத்திரிபால சிறிசேனவின் கையால் வாங்கிய விருது குறித்துப் பெருமை கொள்வதோடல்லாமல், அதை எப்படித் தக்க வைத்துக் கொள்ளலாம், என்று சட்டப் புத்தகங்களை புரட்டுகின்றார். மானமுள்ள தளபதியென்றால், 26 ம் திகதியன்றே அந்த விருதைத் தூக்கி எறிந்திருக்க வேண்டாமோ?

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More