குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனினால் மன்னார் மாவட்டத்தில் ‘கம்றெலிய’ விசேட வேலைத்திட்டத்தில் நிதி ஓதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் நேற்று புதன் கிழமை(7) மாலை வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்திற்கு அமைவாக முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்தில் வசந்தபுரம் சிறி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், நடுக்குடா வேளாங்கன்னி ஆலயம், பாவிலு பட்டங்கட்டி குடியிருப்பு குழந்தையேசு ஆலயம், பருத்திப்பண்ணை தோமையார் ஆலயம், பூலார் குடியிருப்பு, சின்னப்பர் ஆலயம், தலைமன்னார் பியர் ஸ்ரீதேவி முத்துமாரி அம்மன் ஆலயம், தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி ஆலயம், ஜோசப்வாஸ்நகர் உள்ளக வீதிகள், கொன்னையன ;குடியிருப்பு பிலிப்புநேரியார் ஆலயம், தாழ்வுபாடு ஆலயவீதி, கீரி ஸ்ரீ முருகன் ஆலயம், கீரி கர்த்தர் ஆலயம், பட்டித்தோட்டம் சரஸ்வதி வீதி, செல்வநகர் உள்ளக வீதி, ஆகிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுவதற்கான உறுதிப்படுத்திய பத்திரங்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.ரி.மோகன்ராஜ் தலைமையில், மன்னார் நகரசபை தலைவர் ஞ.அன்ரனி டேவிட்சன், டெலோ இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் கணேசலிங்கம் , மன்னார் நகர சபை உறுப்பினர் ஐங்கரசர்மா, உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று உரியவர்களிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது