5 அமைச்சர்கள் இன்றும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ ருவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதய கம்மன்பில புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.C.B.ரத்நாயக்க தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
எஸ்.எம். சந்திரசேன பெருந்தோட்டத்துறை அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். M.L.A.M ஹிஸ்புல்லா நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோக அமைச்சராகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தகம், நுகர்வோர் விவகாரம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். ஐனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்று வருகிறது. இதேவேளை, அரச அச்சகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று உதய கம்பன்பில – ஹிஸ்புல்லா – விமல் அமைச்சர்களாக பதவியேற்பு
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக இன்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் நீர் வழங்கள் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை இன்று காலை விமல் வீரவன்ச வீடமைப்பு அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது