ஆங்கில உச்சரிப்பில் இருந்து வந்த ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பில் அழைக்கும் வகையில் மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பல ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்;தில் அதன் ஒலிக்குறிப்பு மாறாது அமைத்திட மாவட்ட வாரியாக உயர்நிலைக் குழு அமைக்கப்பட் டுள்ளது.
ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டிய ஊரின் பெயர்களைக் குறிப்பிட்டு பொதுமக்கள் ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தற்போது தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் எந்தெந்த ஊர்களின் உச்சரிப்பு ஆங்கிலத்தில் உச்சரிக்கும்போது மாறியுள்ளது என்பதைக் கண்டறிந்து வருவதாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் ஆங்கிலத்தில் ‘டிண்டுகல்’ என்ற உச்சரிப்பில் உள்ளது எனவும் அதேபோன்று ; வத்தலகுண்டு ஆங்கிலத்தில் ‘பட்டலகுண்டு’ என அழைக்கப்படுகிறது.
மாற்றம் செய்த பின்னர் ஆங்கில உச்சரிப்பிலும் இனி வத்தலகுண்டு , திண்டுக்கல் நகர் ஆங்கிலத்தில் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கில எழுத்துகளைக் கொண்டு அழைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் அரசின் ஒப்புதலைப் பெற்று மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் இதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.