198
பிரித்தானிய போக்குவரத்து அமைச்சர் ஜோ ஜோன்சன் (Jo Johnson ) பதவிவிலகியுள்ளார். பிரெக்சிற் தொடர்பில் புதிய வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தே அவர் பதவிவிலகியுள்ளார். பிரெக்சிற் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படும் உடன்பாடுகள் பயங்கரமான தவறுகளாக அமையுமென சுட்டிக்காட்டியுள்ள அவர் இரண்டாம் உலப் போரின் பின்னர் பிரித்தானியா மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜோ ஜோன்சன் இதுவரைகாலமும் பிரெக்சிற்றிற்கு இதுவரை காலமும் ஆதரவாக செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love