இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவதன் மூலம் உண்மையான ஜனநாயகம் வெற்றி பெறட்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம் பாராளுமன்றத்தினைக் கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்ததன் பின்னர் தன்து ருவிட்டர் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தினைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் ஜனாதிபதி சரியான செயலைச் செய்துள்ளார் எனவும் இப்போது மக்கள் தமது கருத்தினைத் தெரிவிக்கட்டும் எனவும் அதைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள் எனவும் நாமல் ராஜபக்ஸ தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.