பத்தொன்பதாவது அரசியலமைப்பின் எந்தவொரு இடத்திலும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் விஜஸதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர்கள்சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , நடைமுறையிலுள்ள பாராளுமன்றத்துடன் நாட்டின் செயற்பாடுகளை தொடந்தும் முன்னெடுக்க முடியாது என ஜனாதிபதி கருதினால், தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது எனவும் அரசியலமைப்பை மீறும் செயல் என்றும் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது