பாராளுமன்றினை கலைப்பது வரை இடம்பெற்ற அனைத்து சம்பவங்களுக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவே பொறுப்புக் கூற வேண்டுமெனவும் அவரது நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற, ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கருஜெயசூரியா ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் குழப்பி விட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் அமெரிக்க தூதுவர்கள் மற்றும் ஏனைய உலக நாடுகளின் தூதுவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளார் எனவும் அதனால் தான் அவர்களிடம் எமது நாட்டு பிரச்சினைக் குறித்து அபிப்ராயங்களைக் கேட்கின்றார் எனவும் குற்றம் சுமத்தியுள்ள கெஹெலிய இலங்கையின் உள்விவகார பிரச்சினைகளைத் தீர்க்க சர்வதேசத்தை நாடும் சபாநாயகரின் நடவடிக்கை அவமானத்துக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.