தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் இணைவதன் மூலம் 2015 ஜனவரி 8 இல் வெளிப்படுத்தப்பட்ட அபிலாசைகளிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிலர் துரோகம் செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கண்டனம் வெளியிட்டுள்ளார். மேலும் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை அழிப்பதற்கு முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏனைய பல கட்சிகள் குழுக்களுடன் இணைந்து நல்லாட்சியை கொண்டுவருவதற்கான யுத்தத்தில் வெற்றிபெற்றது எனத் தெரிவித்த அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்வதன் மூலம் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழிக்க முயல்கின்றனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் யார் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகினாலும் தான் விலகமாட்டேன் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு விசுவாசமானவர்களுடன் இணைந்து கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Add Comment