171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் 631 நாட்களை கடந்த நிலையில் இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.நல்லூர் முன்றலில் காலை 11 மணியளவில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு , கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் அங்கிருந்து பேரணியாக சென்று யாழ்.நாவலர் வீதியில் உள்ள ஐநா அலுவலகத்தில் அமெரிக்கா ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்
Spread the love