ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து பிரித்தானிய பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த செயல்திட்ட உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது ,ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்து பிரித்தானியா பாராளுமன்றில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்ததனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகத் தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் – வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பான உடன்படிக்கையை தெரசா மே தயாரித்திருந்தார்.
இந்நிலையில் பிரெக்சிற் தொடர்பாக பிரித்தானி பிரதமர் சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு அமைசசரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். சுமார் 5 மணிநேர விவாதத்துக்கு பின்னர் இந்த இறுதி முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எனது அறிவுக்கு எட்டியவகையிலும், மனப்பூர்வமாகவும் சிந்தித்து பிரித்தானியாவுக்கும் மக்களுக்கும் நன்மைபயக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.