‘அரசமைப்புக்கு அமைய எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தயார்’
எம்மை வண்ணத்துப்பூச்சி கூட்டமென்றனர். வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், ஆனால் அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். அரசமைப்புக்கு அமைய எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தயாரென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் மஹிந்தவுக்கும் நாம் சவால் விடுக்கின்றோம் அதிக நாள்கள் செல்ல முன்னர் 70 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் அவரை துரத்த தயாராகவிருக்கின்றனர் என்றார்.
நாம் 10 தேர்தல்களுக்கு தயாராகவிருக்கின்றோம். ஜனநாயக ரீதியான தேர்தலுக்கு நாம் தயார் எமக்கு ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒன்றாகத் தாருங்கள் என்றார்.
இதேவேளை, முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சவால் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் தயாராகவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் மஹிந்தவுக்கும் நாம் சவால் விடுக்கின்றோம் அதிக நாள்கள் செல்ல முன்னர் 70 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் அவரை துரத்த தயாராகவிருக்கின்றனர் என்றார்.
நாம் 10 தேர்தல்களுக்கு தயாராகவிருக்கின்றோம். ஜனநாயக ரீதியான தேர்தலுக்கு நாம் தயார் எமக்கு ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒன்றாகத் தாருங்கள் என்றார்.
இதேவேளை, முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சவால் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் தயாராகவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு தெரிவித்துள்ளார்