குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த சில நாட்களாக பெரும் அச்சத்தை எற்படுத்தியிருந்த கஜா புயல் நேற்று நள்ளிரவுடன் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் விடுக்கப்பட்ட அறிவிதளின் படி ‘கஜா’ புயலானது மன்னார் மாவட்டத்தின் ஊடக காற்றின் திசை காரணமாக கடந்து செல்லும் எனவும் சில நேரங்களில் புயலின் தாக்கம் வழமையை விட அதிகமாக காணப்படும் எனவும் அதனால் மன்னார் மாவட்ட மக்களை தயார் நிலையில் இருக்குமாறும் பணிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் மன்னார் மாவட்ட அரசங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர்கள் கண்காணிப்பில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அவசர நிலை தொடர்பான விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி தொடக்கம் காலை வரை தொடர்சியாக மன்னார் மாவட்டத்தில் ஒரளவு வேகத்துடனும் அதிகளவிலான மழையும் பெய்து வருகின்றது.
புயலானது கரையை கடந்த போதும் மழையானது தொடர்சியாக பெய்து வருவதனால் அனேகமான இடங்கள் நீரில் முழ்கியுள்ளது.கற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படுவதனால் அனேக வீடுகளின் வேலிகள் கூரைகள் தூக்கியெறியப்பட்டுள்ளது.
மேலும்; தொடர்சியாக மந்தமான இருண்ட கால நிலையே மன்னாரில் கணப்படுகின்றது அத்துடன் கடல் மட்டமும் அதிகரித்து காணப்படுகின்றது.மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது