நாட்டில் தற்போது நாட்டியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியினைத் தொடர்ந்து மத்தியில் வன்முறைகள் ஏற்படாத வண்ணம் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை திணைக்களத்திற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த பணிப்புரையினையடுத்து கொழும்பில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முப்பது அமைச்சுக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக விசேட அதிரடிப்படை மற்றும் காவல்துறைப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் , அலரி மாளிகை , ஜனாதிபதி செயலகம் , பாராளுமன்றத் தொகுதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் சிறப்பு பாதுகாப்பு நடவக்கைகள் காவல்துறைமா அதிபரின் உத்தரவுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது