அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத்தில் வெளியிட்ட ஜூலியன் அசான்ஜே மீது அமெரிக்காவின் வோஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத்தில் வெளியிட்டதனையடுத்து, அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜூலியன் அசான்ஜே லண்டனில் உள்ள ஈக்வேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்தநிலையில் அவர்மீது சுவீடன் நாட்டுப் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமதியுள்ள நிலையில் இதுதொடர்பாக, விசாரணை நடத்திய காவல்துறையினர் லண்டனில் தங்கியுள்ள அசான்ஜே வுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில், தங்களது நிறுவனர் ஜூலியன் அசான்ஜே மீது வோஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸின் உயரதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
எனினும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தன்மை குறித்த விரிவான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது