கஜா புயல் காரணமாக நேற்று வடக்குப் பாடசாலைகளில் பிற்போட்டப்பட்ட தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் காரணமாக நேற்றைய தினம் பாடசாலைகளுக்கு திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன் நடைபெறவிருந்த பரீட்சைகளும்’ பிற்போடப்பட்டன. இது தொடர்பில் விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இயற்கை அசாதாரண சூழ்நிலை காரணமாக இன்று நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும் எனவும் இதற்கான அறிவிப்பு அனைத்து வலயக் கல்வி பணிமனைகள் ஊடாகவும் பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.