பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக கூறுவதும், அரசாங்க ஆசனங்களை அடாவடித்தனமாக கைப்பற்றியிருப்பதும் தவறான செயற்பாடு என மகிந்த ராஜபக்ச ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், நம்பிக்கையில்லா பிரேரணையில் தாமும் வாக்குகளை அளிக்க முடியும் எனவும் ஆனால், தமது கட்சியில் உள்ள சில சக்திகள் அதனை அனுமதிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஒரு மதிநுட்பமான அரசியல்வாதி என்பது தனக்கு தெரியும் எனக் கூறிய குமார வெல்கம, இதனை அவர் அனுமதிக்கமாட்டார் எனவும் அவர்களுக்குப் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் எதற்காக ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழப்பங்களை, வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஒளிப்பதிவு செய்து கொண்டதாக குறிப்பிட்ட குமாரவெல்கம, அதனை உலகம் முழுவதும் அனுப்புவார்கள் எனவும் இது எமது நாடு பற்றி உலகம் குறைத்து மதிப்பிடவே உதவும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.