கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் காணப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி இன்று உடைக்கும் பணி இன்றையதினம் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது
நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட 14 எஸ்எல்ஜிஎன் படைபிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த பதுங்குகுழியே இவ்வாறு உடைக்கப்படுகிறது . கடந்த வருடம் முதல் தெற்கிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பதுங்குகுழியை பார்வையிட்டு வந்த நிலையில் இவ் வருடம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது உடைக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த நிலக்கீழ் பதுங்குகுழியை உடைக்கும் நடவடிக்கையை புகைப்படம் எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.