லண்டனில் நடைபெற்றுவரும் முதல்தர 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின் அரைஇறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பெடரர் போட்டியிலிருந்த வெளியேறியுள்ளார். லீக் போட்டிகளின் முடிவில் ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சுவிட்சலாந்தின் ரோஜர் பெடரர் சொபியாவின் ஜோகோவிச் மற்றும் தொன்னாபிரிக்காவின் கெவின் அண்டர்சன் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறியிருந்தார்கள்.
இந்தநிலையில் நேற்றையதினம் நடைபெற்ற முதலாவது அரைஇறுதிப்போட்டியில் ரோஜர் பெடரரும் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் போட்டியிட்ட நிலையில் பெடரர் 5-7, 6-7 (5-7) என்ற நேர்செட்டில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். இதேNளை அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது