152
நைஜீரியாவின் தென் மேற்கில் உள்ள ஓசின் நாட்டின் ஆளுனர் ராவுப் அரெக்பெஸோலா தான் பணியில் இருந்த எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார். தற்போது அவர் பணியில் இருந்து விடைபெறும் நேரத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு கூட்டத்தில் பேசும்போது, இந்த நாடு தனக்கு சாப்பாடு போட்டு, வாகனங்கள் அளித்து, தங்க இடமும் வழங்கியுள்ளதால், பணத் தேவை இருக்கவில்லை எனவும் அதனால் ஊதியம் பெறவில்லை எனவும் ஆளுநர் ராவுப் அரெக்பெஸோலா தெரிவித்துள்ளார்.
எனினும் அவரது கருத்தினை ஏற்க மறுத்த சிலர் சமூக ஊடகங்களில் இவரை குற்றஞ்சாட்டியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது
Spread the love