நெதர்லாந்தில் உள்ள மியூசியத்தில் இருந்து 2012ம் ஆண்டு காணமல் போன பிகாசோ ஓவியம் 6 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற ஓவியரான பிகாசோவின் ஓவியங்கள் பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் நெதர்லாந்தின் ரொட்டர்டாம் நகரில் உள்ள குன்ஸ்தல் மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த பிகாசோவின் 7 ஓவியங்கள் 2012-ம் ஆண்டு காணாமல் போயிருந்த நிலையில் தனி குழு அமைக்கப்பட்டு ஓவியங்களை மீட்பதற்கான பணி நடைபெற்று வந்தது.
இதனையடுத்து ஓவியங்களை திருடியதாக ருமேனியர்கள் சிலர் கைது செய்யப்பட்ட போதும் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், திருட்டு போன ஓவியங்களில் ஒன்று 6 வருடங்களுக்குப் பின்னர் ருமேனியாவின் துல்சியா மாநிலத்தில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்பெறுமதி 9 லட்சத்து 5 ஆயிரம் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது