Home இலங்கைநறுவிலிக்குளம் விளையாட்டு மைதான தொல் பொருள் அகழ்வுகள் மழையிலும் தொடர்கின்றது :

நறுவிலிக்குளம் விளையாட்டு மைதான தொல் பொருள் அகழ்வுகள் மழையிலும் தொடர்கின்றது :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் நறுவிலிக்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொல்பொருள் அகழ்வு ஆராய்சி பணிகள் கடும் மழைக்கு மத்தியில் இடம் பெற்று வருகின்றது. குறித்த மைதானத்தில் தொல் பொருள் அகழ்வு ஆராட்சிக்கு என பத்து இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் இன்றைய தினம் (19) நான்காவது இடத்தில் அகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.

குறித்த அகழ்வு பணிகளின் போது இரண்டு அடி ஆழத்தின் கீழ் அதிகமாக பழங்காலத்து மட்பாண்டங்கள் கிடைத்துள்ளதோடு சீன கண்ணாடி குவலை துண்டுகள் , வளையல்கள் , போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்டத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக நறுவிலிக்குளத்தில் ஒதுக்கப்பட்ட காணியில் கட்டுமானப்பணிகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது நிலத்தடியில் இருந்து அதிகமான மட் பாண்டங்கள் வெளி வந்தது.

இதனால் தொல்பொருள் திணைக்களம் இவ்விடம் தொல்பொருள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று விளையாட்டு மைதான கட்டுமானப் பணிகளை இடை நிறுத்தி அகழ்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More